மூலவரும், அம்பாளும் சிறிய வடிவில் காட்சி அளிக்கின்றனர். அம்பாள் சன்னதி வெளிப்பிரகாரத்தில் தனியாக உள்ளது. பங்குனி மாதம் 23 முதல் 27ம் தேதி வரை சூரிய ஒளி இறைவன் மீது விழுகிறது. அர்த்த மண்டபத்துக்கு முன் உள்ள பிரகாரத்தில் நவக்கிரக சன்னிதி அருகில் சுக்கிரன் வழிபட்ட சுக்கிரலிங்கம் உள்ளது.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவதாரத் தலம். அவரது பெற்றோர்களான சடைய நாயனார்-இசைஞானியார் தம்பதிகள் திருத்தொண்டாற்றிய தலம். கோயிலுக்கு உள்ளே இடப்பக்கத்தில் சுந்தரர், பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் உடன் காட்சி தருகிறார். கோயிலுக்கு அருகில் சுந்தரர் மடாலயம் உள்ளது. தற்போது (2015) புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நரசிங்க முனையரைய நாயனார் அவதரித்த தலம். உள்பிரகாரத்தில் அவர் பூசித்த மிகப்பெரிய சிவலிங்கம் உள்ளது.
கோயிலுக்குள் வடக்கு பிரகாரத்தில் தனியாக வரதராஜர் சன்னதி உள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஒரு பதிகம் பாடியுள்ளார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார். காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். தொடர்புக்கு : 94861 50804, 04149-224391 |